actorvijay gallery,video,news update |
Posted: 30 May 2012 09:17 AM PDT விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புல்லட் போட்டு வரும் 'துப்பாக்கி' பளபளப்பாக தயாராகி வருகிறது. 'துப்பாக்கி' படம் குறித்தும், எந்த அளவிற்கு பணிகள் முடிந்து இருக்கின்றன என்பது குறித்தும் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்து இருக்கும் பேட்டியில் இருந்து, " துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 60% முடிவடைந்து விட்டது. மும்பை வாழும் ஒரு தமிழ் குடும்பத்தினை பற்றிய கதை. அதனால் முழுக்க முழுக்க மும்பையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜய்யிடம் நான் இவ்வளவு TIMING, SENSE OF HUMOUR எதிர்பார்க்கவில்லை. படத்தில் ஒரு பக்க வசனம் ஆகட்டும், நீளமான காட்சிகள் ஆகட்டும் எல்லாவற்றையும் ஒரே டேக்கில் செய்து முடித்து விடுகிறார். உண்மையிலேயே இதனை நான் ஒரு கமர்ஷியல், மாஸ் ஹீரோ விஜய்யிடம் நான் எதிர்பார்க்கவில்லை. இதனை நான் அவரிடமே கூறி இருக்கிறேன். கமல் சாருக்கு பிறகு விஜய் சார் தான் தொடர்ந்து பாடல்களை பாடி வந்தார். ஏனோ அவரும் 6 வருடங்களாக பாடல் எதுவும் பாடுவது இல்லை. விஜய்யை பாட வைத்து அதனை நமது படத்திற்கு உபயோகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஹாரிஸ் சாரும் அந்த பாடலை கம்போஸ் செய்து முடித்தவுடன் விஜய்யை இந்த பாடலை பாட வைக்கலாமா என்று கேட்டார். நானும் நம்ம நினைத்தோம், இவர் கேட்கிறாரே என்று உடனே சரி என்று கூறி விட்டேன். அப்பாடல் கண்டிப்பாக 'துப்பாக்கி' ஆல்பத்தில் ஒரு சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 'துப்பாக்கி' படத்தின் கதையினை முதலில் இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் விஜய் சாரின் கால்ஷீட் தயாராக இருக்கிறது என்றவுடன் அக்கதையினை விஜய் சார் வைத்து தமிழில் உடனே துவங்கி விட்டேன். இப்படத்தினை முடிந்தவுடன் இதே கதையினை அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் பண்ண இருக்கிறேன். 'கஜினி' படத்தினை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. " என்று தெரிவித்து இருக்கிறார். |
You are subscribed to email updates from Vijay Website for his Fans Vijay Nanban Exclusive News Thuppaki | yohan adhyayam ondru| To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |